ஜனவரி 5ஆம் தேதி மீனவர் குறைதீர் கூட்டம்!

5362பார்த்தது
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஜன. 5மதியம் 3: 00 மணிக்கு மீனவர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே மாவட்ட மீனவ மக்கள், சங்க பிரதிநிதிகள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகளை மனுவாக அளித்துபயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி தொழிலில் பிரதான தொழிலாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மீனவர்களின் குறைதீர் கூட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஜனவரி 5-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 3: 00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மீனவர்கள் குறைதீர் கூட்டமானது நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி