முதல்நாள் கல்வியை அப்துல்கலாமாக தொடங்கிய சிறுவர்கள்.!

71பார்த்தது
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் பயின்ற பள்ளியான மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெகிழ்ச்சி, கல்வியை தொடங்கும் சிறுவர்களுக்கு அப்துல் கலாம் போன்று முகமூடி அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்களுக்கு சென்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றியம் எண் 1 நடுநிலை பள்ளியில் எல். கே. ஜி மற்றும் முதலாம் வகுப்பிற்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்ந்து கல்வியை தொடங்கி வைத்தனர்.

கல்வியை தொடரும் சிறுவர்கள் உற்சாகப்படுத்தும் வகையில் வகையில் அப்துல் கலாம் போன்ற முகமூடி அணிவித்து, இனிப்புகள், புத்தகங்கள் வழங்கி வகுப்புக்குள் வரவேற்றனர்.

இதையடுத்து, ஆசிரியர்கள் சிறுவர்களின் கையினை பிடித்து நெல்மணிகளை உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுத்து உற்சாகத்துடன் முதல் நாள் பள்ளி வகுப்பினை தொடங்கி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி