பிரபல நடிகர் மீதான மோசடி வழக்கு தள்ளி வைப்பு!

64பார்த்தது
ரூ. 14 லட்சம் செக் மோசடி வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடிகர் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணை ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டது.

தேவிபட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 60. இறால் பண்ணை, உப்பளம் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் அபிவிருத்திக்காக ரூ. 15 கோடி கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளார். இதனை அறிந்த நடிகர் சீனிவாசன், தான் கடன் வாங்கி தருவதாக கூறி அதற்காக ரூ. 15 லட்சம் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று முனியசாமியிடம் ரூ. 15 லட்சம் வாங்கி உள்ளார்.

இந்த தொகையை பெற்றுக்கொண்ட சீனிவாசன் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றினார். பணத்தை திருப்பி கேட்ட போது ரூ. 14 லட்சத்திற்கு காசோலை வழங்கினார். அந்த காசோலையை முனியசாமி வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இது தொடர்பாக முனியசாமி ராமநாதபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சீனிவாசன் ஆஜராகவில்லை. மாஜிஸ்தரேட் நிலவேஸ்வரன் வழக்கு விசாரணையை ஜூன் 12க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி