மீனவர்களுக்கு ஒரு வார கால உள் வளாக பயிற்சி முகாம்.!

65பார்த்தது
ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் என்ற ஒரு வார கால உள்வளாக பயிற்சி நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தைக் கான் வலசை ஊராட்சிக்கு  உட்பட்ட அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்  சார்பில் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் பற்றிய ஒரு வார கால உள்வலாக பயிற்சி நடைபெற்றது.


இம்முகாமில், மீனின் உபயோகம் மற்றும் முக்கியத்துவம் கெடுதல் மற்றும் அதற்கான தீர்வு, பலவிதமான பதப்படுத்துதலான உப்பிடுதல், உலர வைத்தல், உறை பதனம் செய்தல், கலன்களில் அடைத்தல், புகைப்பதனம் செய்தல், தனிநபர் சுகாதாரம், மீன் பிடித்தல் முதல் பதப்படுத்துதல் வரை உள்ள கையாளுதலின் பல்வேறு வகையான நிலைகள் மற்றும் மீன் மற்றும் உப பொருட்களின் தரக்கட்டுப்பாடு போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


 இந்த முகாமில் ராமேஸ்வரம் தங்கச்சிமடம், பாம்பன் உட்பட உள்ளிட்ட 20 மீனவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இரண்டு முறை  பயிற்சி நடைபெற்ற மீனவர்கள் பயனடைந்துள்ளனர். மூன்றாவது முறையாக ஒரு வார உள் வளாக பயிற்சி மீனவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி