காரில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு.!

72பார்த்தது
ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு. காரில் இருந்த ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புளி அடுத்த சேர்வைக்காரன் ஊரணியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் தனது  டவேரா காரில் அவர்களது உறவினர்கள் ஐந்து பேரை புதுமடத்திலிருந்து விசேஷ நிகழ்ச்சிக்காக அழைத்துக்கொண்டு ராமநாதபுரம் குமரைய்யாகோவில் பகுதிக்கு சென்றுள்ளார்.  

டவேரா கார் காரிக்கூட்டம் என்ற இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் முன் உள்ள என்ஜின் பகுதியில் இருந்து தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் பதற்றமடைந்தவர்கள் காரை விட்டு  அவசர அவசரமாக இறங்கி தப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி