இலங்கையிலிருந்து அகதிகளாக 6 போ் ராமேசுவரம் வருகை.!

74பார்த்தது
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 போ் ராமேசுவரம் வருகை.!
இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.

ராமேசுவரம் சேரங்கோட்டை கடற்கரையில் அகதிகள் இருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு புதன்கிழமை அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது 6 போ் இருந்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இலங்கை முல்லைத்தீவு இந்துபுரத்தைச் சோ்ந்த சிவராஜா (45), இவரது மனைவி ஜெயகௌரி (43), மகள்கள் கீா்த்தனா (16), ஆா்த்தி (14), சங்கவி (9), மகன் சஞ்சய் (11) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மன்னாா் பகுதியைச் சோ்ந்த ரகு என்பவரின் படகில் ரூ. 50 ஆயிரம் கொடுத்து அதிகாலை 3. 30 மணிக்கு ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்ததாகத் தெரிவித்தனா். விசாரணைக்குப் பிறகு, அவா்கள் 6 பேரையும் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் தெரிவித்தனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழா்கள் அகதிகளாக படகுகள் மூலம் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் தனுஷ்கோடி, ராமேசுவரம் வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி