மாவட்டத்தில் இந்த ஆண்டு 37 கொலை வழக்குகள் - எஸ். பி தகவல்.!

53பார்த்தது
மாவட்டத்தில் இந்த ஆண்டு 37 கொலை வழக்குகள் - எஸ். பி தகவல்.!
மாவட்டத்தில் இந்த ஆண்டு 37 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் தொடர்பான வழக்குகள் தொடர்பாக, இந்த ஆண்டு 784 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு 2023ல், 37 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 4 கொலை வழக்குகள் அதிகரித்துள்ளது. மேலும், சொத்துக்குற்ற வழக்குகள் தொடர்பாக, இந்த ஆண்டு 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் 2023ல் 84 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 1294 வாகன விபத்து வழக்குகளில் 410 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1231 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 2, 27, 685 இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :