மதுரை மாவட்டம் உசுலம்பட்டி அருகே உள்ள பொட்டுலுபட்டி கிராமத்தில் பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகி ஆதிசேடன் என்பவர் தனக்கு தெரிந்த இரண்டு நபர்கள் ஒரே ஆள் என போலி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என அரசு அதிகாரி கூற உன்னை அடித்துவிடுவேன் என ஆதிசேடன் பதிலுக்கு மிரட்டினார்.