ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மகள் 21 வயதுடைய மாலவிகா இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது பின்பு மாலவிகா தற்போது திருமணம் வேண்டாம் எனக் கூறி யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் சம்பவ நாளன்று மாலவிகா தனது வீட்டில் தனக்குத் தானே தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது இதுகுறித்து வேல்முருகன் பார்த்திபனுர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேகமரணம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.