தயார் நிலையில் பசும்பொன் தேவர் குருபூஜை விழா:

63பார்த்தது
தயார் நிலையில் பசும்பொன் தேவர் குருபூஜை விழா:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக். 30ம் தேதியான இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா, 62 ஆவது குருபூஜை விழா நடைபெறுகிறது.

இவ்விழாவனது மூன்று நாட்கள் நடைபெறும் அக்டோபர் 28 ஆன்மீக விழாவாகவும் 29 தேதி அரசியல் விழாவாகவும் நடைபெற்று இன்று அரசு விழாவாக நடைபெறும்.

மேலும் தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் சமுதாய தலைவர்களும் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளதால் பசும்பொன் கிராமம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 10, 000 (பத்தாயிரம் ) போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 300 CCTV கேமராகள் மூலமாகவும் ட்ரோன் கேமரா மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு கண்காணித்து வருகின்றனர்.


மேலும் இந்த ஆண்டு எந்த விதமான அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி