தொற்றுநோய் அபாயத்தில் பரமக்குடி நகராட்சி.!

59பார்த்தது
தொற்றுநோய் அபாயத்தில் பரமக்குடி நகராட்சி.!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில், ஏழாவது குறுக்குத் தெருவில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அந்த தெரு முழுவதையும் நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக அப்பகுயினர் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக பரமக்குடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதியில் விசாரித்த போது… கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில், இந்த பகுதியில் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக பிரதான சாலையிலிருந்து இந்த தெருவுக்கு வரும் பாதை மூன்று அடிக்கு மேல் பள்ளமாக இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். ஆகையால் இந்த பாதையைச் சீரமைத்துத்தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அதிமுக ஆட்சியில் இந்த தெரு மட்டும் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி