*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்*.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில்
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இதன்படி இன்று அதி காலையில் நடைபெற்ற சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்புநிகழ்ச்சி கோயில் ஏகாதசி மகா மண்டபத்தில் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் புடைசூழ
நடன கோபால நாயகி சுவாமிகள் உற்சவர் அருள்பாலிக்க திருப்பாவை பாடல்களை பாடி இசைக்க கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சரண கோஷத்துடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் வலம் வந்து
திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றதை தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.