இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள நேதாஜி நகர் சவுக்கு காட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கருப்புசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1. 600 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனால் மாவட்ட எஸ். பி உத்தரவின்படி காவல்துறையினரும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.