குடிநீர் குழாய்க்காக 15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட புதிய சாலையை தோண்டி நடைபெற்ற பணி: சேறும் சகதியுமாக காணப்படும் சாலையால் வாகன ஒட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வசந்தபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்க்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட 15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு குழி தோண்டும் பணி ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று தற்போது பணிகள் முடிவடைந்தது. சாலைகளை சீரமைக்காமல் சேரும் சகதியுமாக நிறைந்து காணப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் செல்வதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீரும் வற்றாமல் சேரும் சகதி அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.
இரவில் விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
தாலுகா அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றிற்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக உள்ளதால் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.