அபிராமம் அருகே நடந்த பொன் ஏறு பூட்டும் விழா..!

54பார்த்தது
விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பொன் ஏர் பூட்டும் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தில் வழக்கமான உற்சாகத்துடன் விவசாயிகள் கொணடாடடினர்.

தமிழர்களின் பண்பாடு இன்னும் கிராமப்பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அ. பள்ளபச்சேரி கிராம விவசாயிகள் ஒன்று கூடி ஒற்றுமையாக, பொன் ஏறு பிடித்து விவசாய நிலங்களை உழுது கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதியில் விவசாயத்தை துவக்கினால் அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று விவசாயிகள் பொன் ஏறு பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த பொன் ஏறு என்பது விவசாயம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள், காளை மாடுகளுக்கு மரியாதை செய்வது மட்டுமின்றி, இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் ஆகும். பாரம்பரிய விதைகளின் முளைப்பு திறன் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்கின்றனர். அந்த வகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ. பள்ளபச்சேரி கிராமத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொன் ஏறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி