கல்யாணசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முற்றோதுதல் நிகழ்வு.!

83பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே போகலூர் கிராமத்தில் சிவகாமசுந்தரி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிவனடியார்களால் முற்றோறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்யாணசுந்தரேஸ்வரர் சிவனடியார்கள் திருகூட்டம் சார்பில் நாள் முழுவதும் சங்கு நாதங்கள் முழங்க மங்கல இசையுடன் திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர்.

பின் அங்குள்ள குழந்தை ஒன்று சிவபெருமானின் புகைப்படத்தை பார்த்தபடியே திருவாசகம் பாட முயன்றது, அங்குள்ள சிவனடியார்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் காட்சியளித்த மூலவருக்கு மங்கள ஆரத்தி காண்பித்து சுவாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி