மதுரையில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவருக்கு பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா பாலியல் தொல்லை அளிப்பதாக அவரின் தந்தை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதையடுத்து எம்.எஸ்.ஷா, மாணவியின் தாய் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஷாவை போலீசார் தேடி வந்த நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.