குறுகிய பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை.!

67பார்த்தது
குறுகிய பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை.!
கமுதி அருகே உள்ள குறுகிய பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கே. வேப்பங்குளம் ஊராட்சிக்குள்பட்ட குண்டுகுளத்திலிருந்து பிரிந்து வண்ணாங்குளம் கிராமத்துக்குச் செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும், சாலையின் இருபுறறமும் கருவேல மரங்கள் அடந்து வளர்ந்தும் காணப்படுகின்றறன. இதனால் எதிரே வாகனங்கள் வருவது கூட தெரிவதில்லை. மேலும் இந்தச் சாலையில் மிகவும் குறுகலான வளைவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சிறிய பாலம் உள்ளது. இதில் இருபுறறமும் எந்த தடுப்புச் சுவர்களும் அமைக்கப்படவில்லை. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்திலிருந்து கீழே தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றறனர். இரவு நேரத்தில் இதுபோல விபத்தில் சிக்குவோர் மீட்க ஆள்ளில்லாமல் அதிகாலை வரை அங்கேயே கிடந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வண்ணாங்குளம் கிராம சாலையில் உள்ள இந்த ஆபத்தான பாலத்தில் இருபுறறமும் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி