இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் கடந்த (அக். 30) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இந்நிலையில் குருபூஜை முடிந்ததை அடுத்த இன்று(நவ. 1) தங்க கவசம் அகற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.