பரமக்குடியில் ரோடு ஷோ: ஜே பி நட்டா பங்கேற்பு.!

4184பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ரோடு ஷோ மூலம் கிருஷ்ணா தியேட்டரில் தொடங்கி சாலை மார்க்கமாக காந்தி சிலை வரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பலாப்பழத்தில் வாக்களிக்குமாறு பதாகையை தூக்கி காண்பித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தொண்டர்கள் வழி நெடுகிலும் பாஜக கொடி மற்றும் பலாப்பழ சின்ன பதாகைகளை ஏந்தியவாறு மலர்களை தூவி வரவேற்று தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர். இதில் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி