மேலகடலாடி ஸ்ரீ பாதாள காளியம்மன் களரி உற்சவ விழா.!

64பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் மேலகடலாடி அருள்மிகு ஸ்ரீ பாதாள காளியம்மன் வருடாந்திர களரி உற்சவ விழா கடந்த மாதம் 30 ஆம் தேதி திருவிழா காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பாதாள காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மேலக்கடலாடி கடலாடி சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட 1001 பக்தர்கள் கருப்பசாமி அய்யனார் பேச்சியம்மான் காளியம்மன் தவளம் பிள்ளை உள்ளிட்ட பல்வேறு உருவ சாமிகளின் உருவங்களை வடிவமைத்து வண்ணம் தீட்டி மாலை அணிவித்து நாட்டிய குதிரையாட்டம் நடனம் ஆடி மேல தாளங்கள் வான வேடிக்கைகளுடன் பூதங்குடி கிராமத்தில் இருந்து கடலாடி மேலகடலாடி முக்கிய வீதிகளின் வழியாக நகர் வலம் சென்று பாதாளகாளியம்மன் ஆலயம் சென்று அலயத்தை சுற்றி மூன்று முறை வலம் சென்று தங்களது நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி