மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி மாணவிக்கு நிதியுதவி.!

62பார்த்தது
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி மாணவிக்கு நிதியுதவி.!
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவியை பாராட்டி அரசியல் கட்சிகள் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

கமுதி ரஹ்மனியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி காவியஜனனி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதையடுத்து, அரசியல் கட்சியினா், அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் நேரில் சென்று அவரை பாராட்டி நிதியுதவி வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை சாா்பில் ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் வாழ்த்து மடலை ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணிமுருகேசன், மாவட்ட பொறுப்பாளா் முரளிதரன் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள் பேரையூா் கிராமத்தில் உள்ள மாணவி காவியஜனனியின் வீட்டுக்குச் சென்று வழங்கினா்.

அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். கே. தேவா், தொழில் பிரிவு மாவட்டச் செயலா் மாரிமுத்து, சக்திகேந்திர பொறுப்பாளா் சீனிவாசன், தகவல் தொடா்பு பிரிவு பொறுப்பாளா் கணேசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி