சாயல்குடியில் ஆள் மாறாட்டம் செய்து நில மோசடி என புகார்.!

62பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் உள்ள அன்னை வேளாங்கன்னி மாதா சர்ச் க்கு சொந்தமான பொது சொத்தை தனி நபர்கள் சிலர் மோசடியாக பட்டா மாற்றி, விற்பனை செய்ய முயன்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 1979 ஆம் ஆண்டு சாயல்குடி பங்கை சேர்ந்த அன்னை வேளாங்கன்னி மாதா சர்ச்சின், அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த செல்வராஜ் அடிகளார் பெயரில் சர்வே எண் 470/2 ல் உள்ள 6. 22 ஏக்கர் நிலத்தை சாயல்குடி ஜமீன்தார் அண்ணாச்சாமி பாண்டியன் விலைக்கு வாங்கி பத்திரம் பதிவு செய்து பட்டா மாறுதலும் செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 10 கோடி என கூறப்படுகிறது. அந்த நிலம் தற்போது வரை அன்னை வேளாங்கன்னி மாதா சர்ச் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் மோசடியாக கிறிஸ்தவ மக்களை ஏமாற்றும் விதத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு இறந்து போன அப்போதைய பங்கு தந்தை செல்வராஜ் பெயரில் (உயில் மாற்றத்துக்குப்பின் இந்தாண்டு இறந்ததாக) போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் போலியான உயில் ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து, இந்தாண்டு கடந்த மார்ச் 3 ஆம் தேதி சென்னையில் பத்திரப்பதிவு செய்து, தனிநபர் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக கிறிஸ்துவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி