கடலாடி அருகே ஆப்பனூர் கோயிலில் குடமுழுக்கு.!

60பார்த்தது
கடலாடி அருகே ஆப்பனூர் கோயிலில் குடமுழுக்கு.!
கடலாடி அருகேயுள்ள ஆப்பனூர் தெற்குகோட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றறது.

முன்னதாக கணபதி ஹோமம், கோ மாதா பூஜை, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் கடம் புறறப்பாடு நடைபெற்றறது. பின்னர், மூலஸ்தான கோபுரக் கலசத்துக்கு சிவாசாரியர்கள் புனித நீரூற்றி குடமுழுக்கு நடத்தினர். அப்போது, பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து, மூலவர், பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றறது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆப்பனூர் தெற்குகோட்டை கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.

டேக்ஸ் :