திருத்தப்பட்ட சட்டங்கள்: காவல்துறையினருக்கு பயிற்சி.!

60பார்த்தது
திருத்தப்பட்ட சட்டங்கள்: காவல்துறையினருக்கு பயிற்சி.!
இந்திய தண்டனை சட்டத்தில் கடந்தாண்டு மத்திய அரசு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தது. இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் புரிவோர் மீது பல மடங்கு தண்டனையை அதிகரித்தும், ஒரு சில பிரிவுகளில் தண்டனைகளை குறைத்தும், அதன் பெயர்களை பாரதிய எனவும் மாற்றி அமைத்தது.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட சட்ட திருத்தம் மற்றும் அதன் கீழ்வரும் தண்டனைகள் குறித்தும் காவல்துறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி தலைமையில், கமுதி காவல் ஆய்வாளர் குருநாதன், சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது எர்சாத் ஆகியோரது முன்னிலையில், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி உள்ளிட்ட 3 சரகத்திற்கு உள்பட்ட 150 காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதில் கடந்தாண்டு மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், பாரதிய நீதிச் சட்டம், பாரதிய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்குள் வரும் பிரிவுகள், அதற்கான தண்டனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சுழற்சி முறையில் வாரத்திற்கு 150 காவலர்கள் பங்கேற்கும் வகையில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி