டூவீலர்கள் மோதல் - 3 பேர் படுகாயம்!

3956பார்த்தது
விராலிமலை அருகே கோடாலி குடிபட்டியில் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

விராலிமலை காமராஜ் நகரை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் மணப்பாறையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு சென்று விட்டு மீண்டும் விராலிமலையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்பொழுது கோடாலி குடிபட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் அதே திசையில் வந்த திருச்சி மணப்பாறை தாலுக்கா ஆணையூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது மனைவி கஸ்தூரி மற்றும் மகள் தனுஷா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரன்ஸ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் லாரன்ஸ், கஸ்தூரி, சிறுமி தனுஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் காயமடைந்த மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி