விராலிமலையில் பிரேமலதா பிரச்சாரம்!

79பார்த்தது
கரூர் நாடாளுமன்ற தொகுதி, அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் சின்னக்கடை, சோதனை சாவடி பகுதிகளில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரேமலதா பேசியதாவது அதிமுக ஆட்சிக்காலத்தில் விராலிமலை முருகன் கோயிலுக்கு முதியவர்கள் சிரமமின்றி சென்று தரிசனம் செய்து வருவதற்காக மலைப்பாதை அமைக்கப்பட்டு லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் உட்பட அனைவரும் எளிதாக சென்று தரிசனம் செய்து வருகின்றன. தேசிய பறவையான மயில் இங்கு அதிகமாக உள்ளதால் மயில்கள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலையில் மேம்பாலம் அமைக்கப்படும். அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி விராலிமலை தொகுதியில் காவேரி வைகை குண்டாறு திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திட்டத்தை செயல்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று கூறினார். இதில் வேட்பாளர் தங்கவேல், முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி