புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டி நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சுப்பு மகன் விஸ்வநாதன் வயது (22). பிஎஸ்சி உடற்கல்வி முடித்துள்ளார். சம்பவத்தன்று புதுக்கோட்டை செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.