கலை இலக்கியஅணி, வர்த்தக அணி, புதிய பொறுப்பாளர்கள் அறிமுக விழா

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட கலை இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம், வர்த்தக அணி, புதிய பொறுப்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது இதில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ப‌ கருப்பையாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீர்மானம் இயற்றப்பட்டது. சென்ற இடமெல்லாம் அவருக்கு பொதுமக்களும், ஊர் பெரியோர்கள், கிராம பெரியோர்கள், அன்புடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்த வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிமனையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் தலைமையில் கலை இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம், வர்த்தக அணி, புதிய பொறுப்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ப. கருப்பையாவிற்கு நீங்கள் இரவு பகல் பாராமல் நன்கு உழைத்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ஆகவே நீங்கள் கடுமையாக உழைத்து உங்கள் திறமைகளை வெளியிட்டால் அதிமுகவில் சிறு தொண்டன் கூட முதலமைச்சர் ஆகும் அளவிற்கு பதவி தேடி வரும் ஆகவே நீங்கள் நன்கு உழைத்து வெற்றி வேட்பாளர் ப. கருப்பையாவை அதிகப்படியான வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you