பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் வில்வித்தை பிரிவில் வெண்கலம் வென்று, பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக பதக்கம் வென்ற கர்ப்பிணி என்ற பெருமையை பிரிட்டனை சேர்ந்த ஜூடி க்ரின்ஹாம் பெற்றுள்ளார். 7 மாத கர்ப்பிணியான ஜூடி அரையிறுதிப் போட்டியில், குழந்தை வயிற்றுக்குள் நகர்ந்ததால் தோல்வியடைந்தார். இதன்பிறகு, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், அமெரிக்காவின் வில்வீரர் ஃபோப் பேட்டர்சனை வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.