புதுக்கோட்டையில் ரூ. 1.94 கோடியில் நூலகம் அறிவுசார் மையம்!

3621பார்த்தது
புதுக்கோட்டையில் ரூ. 1.94 கோடியில் நூலகம் அறிவுசார் மையம்!
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் ரூ. 1. 94 கோடியில் நவீன வசதிகளுடன், கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் புதன்கிழமை (ஜன. 3) திறக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மற்றும் அறிவுசார் (ஓய்×ர்ஜ்ப்ங்க்ஞ்ங் ஹய்க் நற்ன்க்ஹ் இங்ய்ற்ழ்ங்) என்ற பெயரில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி மையங்களை தமிழ்நாடு அரசு கட்டி வருகிறது. இதன்படி, நகராட்சியில், புதுக்கோட்டை காந்திப் பூங்கா அருகே நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 1. 94 கோடி மதிப்பில் இரு தளங்களுடன் இந்தக் கட்டடப்பணிகள் முடிந்துள்ளன. மைய வளாகத்தில் சர்வதேச தரத்தில் வைக்கப்பட்டு, 11 வசதியுடன் டிஜிட்டல் கணினிகள் இணையதள லைப்ரரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டித் தேர்வுகளுக்கான ஆயிரம் நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒரு தொடுதிரை வசதியுடன் கூடிய படிப்பு மற்றும் கூட்ட அறை அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறியது: ஜனவரி 3ஆம் தேதி சென்னையிலிருந்துb காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் இந்த நூலகத்தைத் திறந்து வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி