மயானம் செல்ல பாதை இல்லாத அவலம்: மக்கள் அவதி!

56பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த கெண்டையன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மயானம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டாற்றின் அருகே உள்ளது.

இங்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. குளத்தை தாண்டிதான் இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் நிலை இருந்தது. இதைதொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், மயான கொட்டகை அமைக்கப்பட்டு மாற்று - பாதை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சாலை வசதி செய்யப்படவில்லை. இதனால் வயல் வெளியின் வழியாக தான் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த ஆராயி என்ற மூதாட்டி இறந்தார். அவரின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி நெல் வயல் வழியாக கொண்டு சென்றனர். அப்போது சேற்றில் வண்டி சிக்கி கொண்டதால் ஒரு கிலோ மீட்டர் தொலைவு ஊர்தியை தள்ளிக்கொண்டே சென்று மூதாட்டியை அடக்கம் செய்தனர். எனவே கெண்டையன்பட்டி கிராமத்திற்கு உடனே மயான பாதை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி