டிப்பர் லாரி மோதி முதியவர் பலி!

71பார்த்தது
டிப்பர் லாரி மோதி முதியவர் பலி!
புதுக்கோட்டை நத்தம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(55). இவர் சம்பவத்தன்று பைக்கில் கந்தர்வகோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சோலைப்பட்டி அருகே வந்தபோது, தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாஸ்கர் அதே இடத்தில் உயிரிழந்தார். ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி