புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தப்ப முயன்ற நிலையில், போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அவர்கள் கடந்த 9ஆம் தேதி அன்று மாமியார், மருமகளை கட்டிப்போட்டு 47 சவரன் கொள்ளையடித்த திண்டுக்கல் ராஜசேகர்(31), மதுரை மகேந்திரன்(34) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.