தச்சங்குறிச்சியில் வாடிவாசலை பார்வையிட்ட அமைச்சர்!

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில், தமிழ்நாட்டின் 2024-ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியினை அமைச்சர் எஸ். ரகுபதி பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, கந்தர்வகோட்டை எம்எல்ஏ. , எம். சின்னத்துரை, புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி