புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது

56பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வடகாட்டில் பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முத்தையா (73), சீனிவாசன் (42) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 620 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி