மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் இறால் வரத்து அதிகரிப்பு!

551பார்த்தது
மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் இறால் வரத்து அதிகரிப்பு!
மணமேல்குடி, கட்டுமாவடி ஆகிய இடங்களில் பெரிய கடற்கரை மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு ஆகியவற்றில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள் விற்பனைக்கு வருகிறது.

மணமேல்குடி மீன் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக இறால் அதிகமாக விற்பனைக்கு வருகிறது. இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதால் அதிகமானோர் இறாலை வாங்கி செல்கின்றனர். இறால் வரத்து அதிகமாக இருப்பதால் கிலோ ரூ. 250-க்கு விற்பனையாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி