ஆர். பாலக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட விழா!

54பார்த்தது
ஆர். பாலக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட விழா!
பொன்னமராவதி அருகே உள்ள ஆர். பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நடைபெற்றது.
பிரசித்திபெற்ற இக்கோயிலில் பங்குனித் திருவிழா அண்மையில் காப்பு கட்டப்பட்டு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.
இதையடுத்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் தேரில் அம்பாள் எழுந்தருளியபின் பக்தர்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி போலீஸார் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you