நடு ரோட்டில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்த பைக்

83பார்த்தது
புதுச்சேரி இந்திராகாந்தி சிலையில் இருந்து புதுச்சேரி நோக்கி சூர்யா என்ற இளைஞர் தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார். நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் எதிரில் வந்தபோது அவரின் பைக் தீடிரென்று தீ பிடித்தது. உடனடியாக தனது பைக்கை நிறுத்திய சூர்யா என்ன செய்வதென்று திகைத்து நின்றார். தீ மளமளவென எரிந்தது. அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தார்கள். இதுகுறித்து உருளையன்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவலர்கள் தீயணைப்பு துறை சார்ந்த வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
இளைஞர் சூர்யா பைக்கில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரம்பியிருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதுள்ளதாக தெரிகிறது.
நடு ரோட்டில் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் புதுச்சேரியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி