சிறுபான்மையின மக்களுக்கு திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

1881பார்த்தது
சிறுபான்மையின மக்களுக்கு திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரியில் சிறுபான்மையின மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சுல்தான் பேட்டை பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து இஸ்லாமியர்களிடையே பேசிய முதலமைச்சராக ரங்கசாமி, கடந்த 5-ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மாநில வளர்ச்சிக்காக எந்த குரலையும் பாராளுமன்றத்தில் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், புதுச்சேரியில் சிறுபான்மையின மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி