சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் பணியை துவக்கம்

578பார்த்தது
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகள் கட்டியிருந்தனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல நெரிசல் ஏற்பட்டது. வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிக் குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி தரக்கோரி கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அங்கு குடிசை வீடு அமைத்து தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் பட்டா தந்தனர். ஆனால் அங்கேயே தொடர்ந்து வசித்து வந்ததால் குடிசைகளை அப்புறப்படுத்த நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். ஏற்கெனவே சிலர் வீடுகளை காலி செய்திருந்தனர்.

மீதமுள்ளவர்களை பொருட்களை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்துடன் அப்பகுதி மக்களும் இணைந்து செயல்பட்டதால் எந்தவித பிரச்சனையும் இன்றி அப்பகுதியில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் அகற்றப்பட்டது எனவே விரைவில் சாலை விரி வாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது.

அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏரிக்கரை சாலை விரிவாக்கம் பணி தற்போது நடைபெற உள்ள நிலையில் இதற்காக முயற்சி எடுத்து பணியை விரைந்து செய்து முடித்த சட்டமன்ற உறுப்பினர் சம்பத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி