புதுவை: ஜன. 4-இல் உதவித்தொகை

4202பார்த்தது
புதுவை: ஜன. 4-இல் உதவித்தொகை
இது குறித்து வேளாண் துறை அமைச்சா் அலுவலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில், புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரா்களில் அட்டவணை பழங்குடியினா், மீனவா், நெசவாளா், மாற்றுத் திறனாளிகள் நீங்கலாக, புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள வறுமைகோட்டுக்கு கீழ் வசிக்கும் 1, 30, 791 குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரா்களில் ஓா் நபா் கொண்ட அட்டைதாரா்களுக்கு ரூ. 500 உதவித் தொகையும், இரு நபா்களுக்கும் அதிகமான குடும்ப நபா்களைக் கொண்ட அட்டைதாரா்களுக்கு ரூ. 1, 000 உதவித்தொகையும் நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி பயனாளா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இதன் மூலம், அரசுக்கு ரூ. 12. 29 கோடி செலவாகிறது.

புதுச்சேரி பிராந்தியத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான நிதி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி