வள்ளலார் 200-இன் நினைவாக தமிழ்நாடு அரசு ரூ. 100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்க முடிவெடுத்தது. ஆனால், அதை வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபைப் பெருவெளியில் அமைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதைக் கைவிட்டு வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கோரி கடலூர் மஞ்ஞக்குப்பத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரியில் இருந்து தெய்வத்தமிழ்ப் பேரவையும் புதுச்சேரி மாவட்ட வள்ளலார் தலைமைச் சங்கமும் இணைந்து 50 பேர் தனி பேருந்தில் சென்று பங்கேற்றார்கள். தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ், தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா. வேல்சாமியில் ஏராளமானோர் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.