கொம்பாக்கம் பகுதியில் எதிர்கட்சி தலைவர் வாக்கு சேகரிப்பு

514பார்த்தது
கொம்பாக்கம் பகுதியில் எதிர்கட்சி தலைவர் வாக்கு சேகரிப்பு
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வெ. வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து வில்லியனூர் தொகுதிகுட்பட்ட கொம்பாக்கம் குளத்துமேட்டு தெருவில் வாக்கு சேகரிக்க சென்ற சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா அவர்களுக்கு 500 க்கும் மேற்பட்ட மகளிர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடத்தில் புதுச்சேரியில் ஆளும் பாஜக - என். ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் அவலங்களை எடுத்துகூறியும், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் புதுச்சேரிக்கான தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.