எமனாக மாறிய பாம்பு.. டப்பாவுக்குள் அடைக்க முயன்றவர் பலி!

52812பார்த்தது
எமனாக மாறிய பாம்பு.. டப்பாவுக்குள் அடைக்க முயன்றவர் பலி!
கடலூரில் பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்தார். கடலூர் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்ற போது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) என்பவர் உயிரிழந்தார். வீடு ஒன்றில் பாம்பு நுழைந்ததாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வீரர்கள் அங்கு விரைந்து பாம்பை பிடித்தனர். அந்த பாம்பை காட்டுப்பகுதிக்குள் கொண்டு விடுவதற்காக உமர் அதனை கேட்டு வாங்கிய நிலையில், பாம்பு அவரைக் கடித்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி