ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் சார்பாக புதுச்சேரி மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு மருத்துவ மனைகளுக்கிடையேயான DR. BLUE இந்தியா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஆரோவில் பல்மேரா திடலில் நடைப்பெற்றது. உப்பு மற்றும் இன்சுலின் பயன்பாட்டில் அளவு முக்கியம் குறித்து பொது மக்களுக்கு மருத்துவத் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தும் பொருட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் மனித சமுதாயம் நோயில்லாத வாழ்க்கை வாழ்வதற்காக டாக்டர் முருகேசன் அவர்கள் கண்டுபிடித்த உப்பை அனைவரும் பயன்படுத்தி பலமான வாழ்வை பெற வேண்டும் என தெரிவித்தார்.