காட்டேரிக்குப்பத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்

74பார்த்தது
காட்டேரிக்குப்பத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட காட்டேரி குப்பம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய். 15, 96, 261 /- செலவில் மேற்கொள்ளப்படும் "மேட்டு தெருவில் உள்ள விடுபட்ட குறுக்குத் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை அமைத்தல் மற்றும் மாரியம்மன் நகருக்கு சாலை வசதி அமைத்தல்" பணிக்கான பூமி பூஜை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வே. எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் வி. ஆனந்தன் மற்றும் ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி