ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்பசாமி. அவருக்கு மிகவும் பிடித்த சித்தர் சேலம் அப்பா பைத்திய சுவாமிகள். தனது வீடு, சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் அப்பா பைத்திய சுவாமிகளின் படத்தை பெரிய அளவில் வைத்திருப்பார்.
தனக்கு ஒரு கஷ்டம் என்றாலும், அரசியலில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் உடனடியாக முதலமைச்சர் ரங்கசாமி சேலம் அப்பா பைத்திய சுவாமிகள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் முடிவெடுப்பார். இந்நிலையில் திடீரென முதலமைச்சர் ரங்கசாமி சேலம் அப்பா பைத்திய சுவாமிகள் மற்றும் பொள்ளாச்சி அழுக்கு சித்தர் சாமியை நேரில் சென்று தரிசனம் செய்தார்.