முத்தியால்பேட்டையில் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி

70பார்த்தது
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” (Viksit Bharat Sankalp Yatra) என்ற கருப்பொருளை உள்ளடக்கிய விழிப்புணர்வு வாகன யாத்திரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி புதுச்சேரியில் கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி நகராட்சி சார்பாக முத்தியால்பேட்டை தொகுதியில் மத்திய அரசின் திட்டங்களினால் பயனடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடல் மற்றும் திட்ட பயன்கள் வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பட்டி மணிகூண்டு அருகே மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் தலைமையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெ. பிரகாஷ் குமார் அவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் திரு சிவகுமார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் திரு இளங்கோவன் மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி