அதிமுக வேட்பாளரான தனது கணவருக்கு வாக்கு சேகரித்த மனைவி

1569பார்த்தது
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அவரது மனைவி நிவேதிதா தமிழ்வேந்தன் புதுச்சேரி நகரப்பகுதிகளில் வித்தியாசமான முறையில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வெண்ணிலா நகர் பகுதியில் அதிமுக வேட்பாளரின் மனைவி நிவேதிதா தமிழ்வேந்தன் வாக்குசேகரித்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் தங்களது கையில் தாங்கள் தினமும் குடிக்கும் மாசடைந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து வந்து நாங்கள் தினமும் இந்த தண்ணீரைத்தான் குடிக்கிறோம். ஆட்சியாளர்களிடம் பல முறை முறையிட்டும் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை, இதுவரை ஆட்சியாளர்களும் எங்களை வந்து பார்க்கவில்லை என்று கூறினர்.

மேலும் அந்த தண்ணீர் வாங்கி குடித்த வேட்பாளரின் மனைவி நிவேதிதா தண்ணீரை குடிக்கமுடியாமல் இருப்பதை கண்டு வேதனையடைந்தார். மேலும் அப்பகுதி மக்கள் எங்களுக்கு கழிப்பறை வசதி இல்லை போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளை அடுக்கடுக்காக புகாராக கூறினர்.

உங்களது புகார்கள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றி தருகிறோம் என உத்தரவாதம் அளித்தார். அதிமுக வேட்பாளரின் மனைவி நிவேதிதா. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் எங்களது ஓட்டு அதிமுகவிற்கு தான். நீங்கள் எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என கூறினார்.

தொடர்புடைய செய்தி